ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..! (wow)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!
20 மார்ச் 2010
தெரிந்துகொள்ளுங்கள்!
உலகில் உள்ள மொத்தப் பரப்பளவில் 71% தண்ணீர் உள்ளது.
- இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
- செங்கற்களை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்.
- கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.
- நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது 28.
- இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.
- நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பிப்ரவரி 28.
- நேரு தனது மனைவி கமலா நேரு இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.
- நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.
- “பெலுகா’ என்ற பெயர் கொண்ட திமிங்கலங்கள் கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் காற்று இன்றி உயிரோடு இருக்கும்.
- “ரோடு ரன்னர்’ என்ற பெயருக்கு ஏற்றாற்போல, இந்தப் பறவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால், பறக்காது.
- ஒரு வளர்ந்த ஆண் யானை, ஒரு நாளைக்கு 63 கிலோ எடையுள்ள மரம், தழை, புல் போன்றவற்றை சாப்பிடும்.
- ஒரே நேரத்தில் ஒரு ஆமை 120 முட்டைகள் இடும்.
- ராட்சத ஆமையின் எடை 40 கிலோ இருக்கும்.
-அமெரிக்காவில்
உள்ள “சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.
இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும்
அல்லது இறங்கும். ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப்
புள்ளிவிவரத்தின் படி, ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து
போகின்றன. இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள்
என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. விமானப்
போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு
அமைந்துள்ளன.
-வட அமெரிக்காவில் பேரீச்சை மரம் அதிகளவில்
பயிராகிறது. மேற்காசியா மற்றும் தென் ஐரோப்பாவிலும் ஓரளவு
பயிரிடப்படுகிறது. 100 அடி உயரம் வளரக் கூடியது. 300 வருடங்கள் வரை
பழங்கள் தரும். பேரீச்சம் பழம் சத்து நிறைந்தது. பேரீச்சை மரத்தின்
இலைகளைக் கொண்டு ஆப்பிரிக்கர்கள் தங்கள் குடிசைகளுக்குக் கூரை போட்டுக்
கொள்கின்றனர். இதிலிருந்து கயிறும் தயாரிக்கப்படுகிறது. இதன் இளம்
தண்டிலிருந்து ஒருவகைப் பானம் தயாரிக்கப்படுகிறது.

18 மார்ச் 2010
மைக்ரோசாப்ட் ஜாதகம் அறிய
இந்த உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு வேண்டுமா? அதன் முகவரி, ஊழியர்களின் எண்ணிக்கை, சாதனை செய்த நாட்கள், வருமானம், கிளை அலுவலகங்கள், ஆய்வுக் கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிய ஆசையா?
ஆம், இருக்காதா பின்னே! நம்மைப் பற்றிய தகவல்களை எல்லாம் பல வழிகளில் மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்கிறதே. அப்படியானால், அதனைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே என்கிறீர்களே. கவலையே பட வேண்டாம். மைக்ரோசாப்ட் நிறுவனமே தன் சர்வரில், ஒரு தளத்தில் தன்னைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்ப்பதற்காகவே போட்டு வைத்துள்ளது. http://www.microsoft.com/presspass/inside_ms.mspx#EKF ன்ற முகவரியில் உள்ள தளம் சென்று தேவையான அனைத்து தகவல்களையும் பெறலாம்.
17 மார்ச் 2010
உலகின் முதல் இணையதளம்
செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html
1990-ல் இவ்வெளிய பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள்.
இந்த மே மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 168,408,112 அபாரமானமான வளர்ச்சிதான். இத்தனை வெப்தளங்கள் உருவாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது.
தங்கள் இணையதளங்களில் ஓடும் விளம்பரங்களை கிளிக்கினால் மாதம் தோறும் காசோலை வீடு தேடி வரும் என்றதும் மெக்கானிக்கல், சிவில் மாணவன் கூட இணையதளம் தொடக்கினான். பல வெப்வித்தைகளை காட்டி சட்டம் சட்டமாய் விளம்பரங்களைப் போட்டு. இப்படி ஆடை அணிகலன்களோடும் நிர்வாணமாயும் ஆயிரம் ஆயிரம் தளங்கள்.
இத்தனை வெற்றிகரமான கூகிளின் ஆட்சென்ஸ் புராஜெக்ட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு இந்தியர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் பெயர் கோகுல் ராஜாராம் (Gokul Rajaram). 2003-ல் கூகிளின் இந்த நுட்பம் வெளிவந்த பின்பு தான் கூகிளுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.அப்புறம் இணைய காட்டுக்கு இன்றுவரை கூகிள் தான் ராஜா.
ராஜாராம் கான்பூர் IIT யில் B.Tech முடித்து பின் MIT Sloan School of Management-ல் M.B.A-யும் M.S. in Computer Science-ம் முடித்தவர். ராஜாராம் பழைய நினைவுகளை சொலலும்போது “When we started adsense, it was just me and four engineers,” “The night before we launched, Sergey spent five hours with me testing the system and pointing out bugs.” என்கின்றார் மறக்க இயலாத நினைவுகளாக. இணையத்தின் போக்கையே மாற்றிய நாளல்லவா அது. இங்கு அவர் கூறும் "செர்ஜி" கூகிளை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
ஆனாலும் கோகுல் ராஜாராம் இன்றைக்கு Xoogler ஆகிவிட்டார். அதாவது x-googler. மில்லியன்களை சம்பாதித்து விட்டு இனி தானே தனக்காக உழைக்கப்போவதாக chailabs.com தொடங்கியிருக்கிறார். அதன் விவரங்களெல்லாம் இப்போதைக்கு ரகசியமே. எதாவது வியப்பாய் சீக்கிரமாய் கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இன்றைக்கு Google Adsense-ன் நிலமை அவ்வளவு பிரகாசமாய் இல்லை. மைஸ்பேஸ் சிறுவர்கள் கும்பலை நம்பி மில்லியன்களை கூகிள் செலவழித்து கையை தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. வருமானமும் கம்மி. கொஞ்ச காலமாய் இன்னோவேசனே இல்லை. இப்படி அநேக கம்ப்ளெயின்ட்கள். பல முக்கிய googler-கள் வேறு xoogler-கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாய் மாற்றங்கள், உலகில் அது மட்டும்தானே மாறாதது.
இணையத்தை அச்சடித்தால்...
மரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா?. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ?16 மார்ச் 2010
இணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா? ஆங்கிலத்தில் கற்கவேண்டுமா? தமிழில் கற்க வேண்டுமா? தமிழ் விளக்கவுரையுடன் கற்கவேண்டுமா? அல்லது தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஆங்கில விளக்கவுரையுடன் கற்க விரும்புகின்றீர்களா? பிற மொழிகளில் கற்க விரும்புகின்றீர்களா?
எப்படி விரும்புகின்றீர்களோ அப்படியெல்லாம் உங்கள் வசதிகேற்பக் கற்கலாம்.
விரும்பி கற்க விரும்புவோர் எவரும் இருந்தால் அவர்களுக்காவது பரிந்துரைக்கலாம் அல்லவா? இதோ அதற்கானத் தளங்கள்.
திருக்குறள் தமிழில்
http://kural.muthu.org/

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)