ஆச்சர்யம் பல வகை அதில் இது ஒரு வகை

பியானோ பழகு

கடிகாரம்

20 மார்ச் 2010

தெரிந்துகொள்ளுங்கள்!

உலகில் உள்ள மொத்தப் பரப்பளவில் 71% தண்ணீர் உள்ளது.

- இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

- செங்கற்களை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்.

- கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.

- நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது 28.

- இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.

- நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பிப்ரவரி 28.

- நேரு தனது மனைவி கமலா நேரு இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.

- நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

- “பெலுகா’ என்ற பெயர் கொண்ட திமிங்கலங்கள் கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் காற்று இன்றி உயிரோடு இருக்கும்.

- “ரோடு ரன்னர்’ என்ற பெயருக்கு ஏற்றாற்போல, இந்தப் பறவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால், பறக்காது.

- ஒரு வளர்ந்த ஆண் யானை, ஒரு நாளைக்கு 63 கிலோ எடையுள்ள மரம், தழை, புல் போன்றவற்றை சாப்பிடும்.

- ஒரே நேரத்தில் ஒரு ஆமை 120 முட்டைகள் இடும்.

- ராட்சத ஆமையின் எடை 40 கிலோ இருக்கும்.

-அமெரிக்காவில்
உள்ள “சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.
இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும்
அல்லது இறங்கும். ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப்
புள்ளிவிவரத்தின் படி, ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து
போகின்றன. இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள்
என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. விமானப்
போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு
அமைந்துள்ளன.

-வட அமெரிக்காவில் பேரீச்சை மரம் அதிகளவில்
பயிராகிறது. மேற்காசியா மற்றும் தென் ஐரோப்பாவிலும் ஓரளவு
பயிரிடப்படுகிறது. 100 அடி உயரம் வளரக் கூடியது. 300 வருடங்கள் வரை
பழங்கள் தரும். பேரீச்சம் பழம் சத்து நிறைந்தது. பேரீச்சை மரத்தின்
இலைகளைக் கொண்டு ஆப்பிரிக்கர்கள் தங்கள் குடிசைகளுக்குக் கூரை போட்டுக்
கொள்கின்றனர். இதிலிருந்து கயிறும் தயாரிக்கப்படுகிறது. இதன் இளம்
தண்டிலிருந்து ஒருவகைப் பானம் தயாரிக்கப்படுகிறது.